கடந்த 4 ஆம் திகதி வெலிசர , மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.17 வயதுடைய இரத்தினபுரியைச் சேர்ந்த இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞனின் உறவினர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.16 வயதுடைய சிறுவன் ஒருவனாலே இந்த விபத்து இடம்பெற்றது.விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய இளைஞன் மற்றும் தந்தை ஆகியோர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.