வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (30) புத்தளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மழைகாலத்தில் ஏற்படும் தொடர்ச்சியான வெள்ள பாதிப்பின் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்துமாறு கோரி புத்தளம் நகரப் பகுதியை சேர்ந்த பிரதேசவாசிகள் புத்தளம்- அனுராதபுரம் வீதியில் புகையிரத தண்டவாளத்தை மறைத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் புத்தளம் மாவட்ட செயலகத்தவரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.அதேநேரம் புத்தளம் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் இப் பிரதேசத்துக்கு வருகை தந்து மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இது பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.