ஸ்கொட்லாந்து கடல் பகுதியில் தீடீரென ஏற்பட்ட நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது.தெற்கு அயர்ஷையர் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நீர்ச்சுழலை ஒருவர் தனது ட்ரேன் கெமரா மூலம் படம் பிடித்துள்ளார்.அப்போது நீர்ச்சுழலிலிருந்து வெளியேறும் நீர் கடலின் அலைக்கு எதிர் திசையில் சென்றதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்கனவே இருந்த கழிவு நீருடன் மழை நீரும் கலந்ததால் இந்த நீர்ச்சுழல் உருவானதாக தெரிவித்துள்ளனர்.