2022ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் இன்று (12) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவு திட்ட விவாதம் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.இது சுதந்திர இலங்கையின் 76 வது வரவு செலவு திட்டமாகும்.இவ் நிதி ஒதுகீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நிதி அமைச்சரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2022ஆம் நிதியாண்டுக்கான சேவைகளுக்கான செலவீனங்களை திரட்டு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், இலங்கைக்குள் அல்லது வெளிநாடுகளில் கடன் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் 2021 செப்டம்பர் மாதம் 29 திகதி வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டது.
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியின் சேவைக்காக நிர்ணயிக்கப்பட்ட 2505 பில்லியன் முன்னூற்று நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டாயிரம் ரூபா அரச செலவீனத்துக்காக பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டமாகும்.