வரவு செலவுத்திட்ட வாசிப்பு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று (12) நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.வரவு- செலவுத்திட்ட சமர்ப்பணத்தை பார்வையிட ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு,விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
2020 வரவு செலவு திட்ட முன்மொழிவுகள்.
🔴பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வு காலத்தை 5 வருடங்களிலிருந்து 10 வருடங்களாக அதிகரிப்பதற்கான பிரேரணைகள் முன்வைப்பு.
🔴அரச சேவையாளர்களின் ஓய்வு பெறும் வயது 65 ஆக நீடிப்பு.
🔴அரச நிறுவனங்களில் சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் பெற்றோலை மாதம் 5 லீற்றராக குறைப்பதற்கும் தொலைபேசி கட்டணங்களை 25 வீதமாக குறைப்பதற்கும் மின்சார செலவை குறைத்து சூரிய சக்தியை உபயோகிப்பதற்கு பரிந்துரைகள் முன்வைப்பு.
🔴சமுர்த்தி வங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கும் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்தவும் யோசனை முன்வைப்பு.
🔴வரிகளை முறையாக வசூலிப்பதற்கு உள்நாட்டு வரி திணைக்களத்தை பலப்படுத்துமாறும் யோசனை முன்வைப்பு.
🔴தேசிய ஆடை உற்பத்தியில் பத்திக் ஆடை உற்பத்திகளை அதிகரித்து அதன் ஊடாக வெளிநாட்டு செலாவணியை பெற்றுக்கொள்ள விசேட வேலைத்திட்டம்.
🔴விவசாயிகளை பாதுகாப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் முன்னின்று செயற்படும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் விசேட வேலைத்திட்டம்.
🔴ஏறாவூரில் இரண்டு புதிய ஆடை உற்பத்தி வலயங்களை நிறுவுவதற்கு முன்மொழிவு.
🔴பெருந்தோட்ட, சிறு பயிர்ச்செய்கைகளின் விளைச்சலை அதிகரிப்பதற்காக நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
🔴பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
🔴சுற்றுலாத்துறையை சிறப்பாக பேணுவதற்கு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல் ,துறைமுக , விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள வர்த்தகங்களை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.
🔴முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நிவாரணம்.
🔴கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம்.
🔴தொற்று நோய் பரவும் காலங்களில் சுகாதாரத்துறை,பாதுகாப்பு துறையினருக்கு மேலதிகமாக நமது வர்த்தக துறையினர் அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் ஒத்துழைத்தார்கள்.
🔴சர்வதேச போதைப் பொருள் மாபியாவுக்கு இலங்கையை உள்ளீர்த்துக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன இது அபாயமாகும்.
🔴மக்களுக்கான உதவிகளை எங்களால் முடிந்தளவு செய்து கொடுத்தோம்.
🔴வரவு செலவு யோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அனைத்துத் தரப்பினருடன் நாம் கலந்துரையாடல் நடத்தினோம்.அவர்களுடைய முன்மொழிவுகளை செவிமடுத்தோம்.
🔴சர்வதேச போதைப் பொருளுக்கு அடிமையாவதிலிருந்து மீட்பதற்கு ஜனாதிபதி, பொலிஸ் , இராணுவம் என்பன பாரிய செயற்பாடுகளை முன்னெடுத்தது.
🔴உலக நாடுகள் முகங்கொடுக்கும் பல்வேறு சவால்களுக்கு நாங்களும் முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவானது.
🔴பொருட்களின் விலையை அதிகரிப்பது சாதாரணமாகியுள்ளது.இதனை தேசிய ரீதியில் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது இதற்கு சர்வதேச உதவிகளும் தேவையாகும்.
🔴கடந்த காலங்களில் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்தன எனினும் எந்தவொரு அரசாங்கத்தாலும் அவற்றை குறைக்க முடியாது போனது.
🔴சந்தையில் பொருட்கள் , சேவைகள் விலைகளை முகாமைத்துவம் செய்வதென்பது நீண்டகால செயற்பாடாகும்.
🔴சிறு உற்பத்தியாளர்கள் முதல் பாரிய உற்பத்தியாளர்கள் வரை தடையின்றி சேவைகளை வழங்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
🔴அந்நிய செலாவணியின் இருப்பு குறைந்துள்ளதையும் ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
🔴வரவு செலவு திட்டத்தில் அதிக செலவீனம் கடன்களை செலுத்துவதற்கே ஒதுக்கப்படுகிறது.
🔴நல்லாட்சி அரசாங்கத்தால் பெற்றுக் கொண்ட 6.9 பில்லியன் டொலர் கடனை எங்களுடைய அரசு செலுத்த வேண்டி ஏற்பட்டது.
🔴வெளிநாட்டு நாணய இருப்பை அதிகரித்துக் கொள்வதற்கு நாம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.சந்தைப் பொருட்களை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
🔴கடன் பெற்றுக் கொள்ளாது வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க எதிர்பார்க்கிறோம்.
🔴சுற்றுலாத்துறையை சிறப்பாக பேணுவதற்கு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல் ,துறைமுக , விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள வர்த்தகங்களை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.
🔴2020 ஆம் ஆண்டு மாத்திரம் நூற்றுக்கு 20% சமூக நலனுக்கு செலவிடப்பட்டுள்ளது.
🔴உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தலில் தடையின்றி அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உணவு பெற்றுக் கொடுத்தலை முக்கியமாகக் குறிப்பிடுகிறது.
🔴நாட்டில் சமூக , பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கினேன்.
🔴2022 வரவு செலவு திட்டத்தை தயாரிக்கும் போது ஜனாதிபதியின் ” சுபீட்சத்தின் நோக்கு என்ற தேசிய கொள்கையை முழுமையாக கவனத்தில் கொண்டோம்.
🔴அரசிடமுள்ள அனைத்து சொத்துக்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
🔴சமுதாய நலன்புரிகளுக்காக மக்களை தெரிவு செய்யும் போது விஞ்ஞான பூர்வமான திட்டங்கள் அவசியமாகும்.
🔴கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த யோசனை முன்வைக்கிறேன்.
🔴தொலைக்காட்சிகளுக்கான அலைவரிசை பகிரங்க ஏலத்தில் விடப்படும்.
🔴சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் மருந்துவகைகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை.
🔴ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்துவதற்கும் ஆயுர்வேத வைத்திய துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
🔴விவசாயிகளை பாதுகாப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் முன்னின்று செயற்படும் அதற்காக விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.
🔴இலங்கையை ஐந்து மகா கொள்கைகளைக் கொண்ட நாடாக மாற்றுவோம்.
🔴வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை தளர்த்தி புதிய முறைகளை அறிமுகப்படுத்த திட்டம்.
🔴வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு செலாவணியை அதிகரிப்பதற்காக , தூதுவர்களுடன் கலந்துரையாடி வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.
🔴வெளிநாடுகளுக்குச் செல்ல காத்திருக்கும் 130,000 பேருக்கு விரைவாக தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
🔴புதிய வியாபாரத்தை பதிவு செய்வதற்கு அறவிடப்படும் கட்டணத்தை 2022 ஆம் ஆண்டு அறவிடாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
🔴அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செலவுகளைப் பொறுத்தவரையில் அவை பொதுமக்களுக்கான முதலீடுகள் என்றே கருதுகிறேன்.
🔴நாட்டில் 80% வீதமானோர் விவசாயத்துறை , விவசாயத்துறை சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள் . விவசாயத்துறையிலுள்ள சவால்களை நாம் அடையாளங் கண்டுள்ளோம்.
🔴நஞ்சற்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.
🔴2022 ஆம் ஆண்டுக்கு தேவையான சேதன பசளையை உற்பத்தி செய்வதற்கு முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்.
🔴உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் விவசாய தொழில்நுட்பத்தை துரிதமாக மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
🔴மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
🔴வீதி அபிவிருத்திக்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
🔴வீடு மற்றும் நகர அபிவிருத்திக்காக இரண்டாயிரம் மில்லியன் ஒதுக்கீடு.
🔴பெருந்தோட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
🔴அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய தொகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 5 மில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு.
🔴கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் பாதிப்புக்குள்ளான மொத்த, சிறு மத்திய வியாபாரங்கள் மேற்கொள்வோரின் நலன் கருதி 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
🔴பாடசாலை மூடப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட பஸ் , வேன் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
🔴கொவிட் 19 தொற்றுக் காலத்தில் பாதிப்புக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 700 மில்லியன் ரூபா நிவாரணம் ஒதுக்கீடு.
🔴காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இழப்பீடாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
🔴சிகரெட்டுக்கான வரி அதிகரிப்பு சிகரெட் ஒன்றின் விலை 5 வினால் உயர்வு.
🔴அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு 30 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.