2023 ஆம் ஆண்டின் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என அமீரக பிரதமர் ஷேக் முகம்மத் பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் கிளாஸ்கோவில் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி ஆரம்பித்து நேற்று (12) நிறைவுபெற்றது. இம் மாநாடு அடுத்த ஆண்டு எகிப்தில் இடம்பெறவுள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த டீசல் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து உலக நாடுகள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்ற ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், OPEC எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி கூட்டமைப்பு நாடுகளின் ஒரு அங்கமாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம் 2023 ல் டுபாயில் இந்த உச்சி மாநாட்டை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.