நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நாட்டின் சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 60264 குடும்பங்களைச் சேர்ந்த 212060 பேர் உட்பட ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 07 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் 11 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.