2021 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நாளையிலிருந்து (10) எதிர்வரும் (20) ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-11 திகதி வரை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.