ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப் போட்டி இன்று (14) டுபாயில் இடம்பெற்றது.இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் அதிகபட்சமாக கெஸல்வூட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
173 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 77 மற்றும் வோர்னர் 53 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலியா அணி முதலாவது இருபதுக்கு இருபது தொடர் செம்யியன் என்ற பெயரை பெற்றுக் கொண்டனர்.