T20 Highlights: நமீபியாவுடனான போட்டியில் நியூசிலாந்து அணி 52 ஓட்டங்களால் வெற்றி!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 36 வது போட்டியாக நமீபியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இன்றைய போட்டி சார்ஜாவில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் கப்டில் 18, மிச்சல் 19, வில்லியம்சன் 28, கொன்வே 17, கிலேன் பிலிப்ஸ் 39, நீசம் 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.நமீபியா அணியின் பந்துவீச்சில் சொல்ட்ஸ் ,வய்ஸ் மற்றும் எரஸ்மஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

நமீபியா அணியின் துடுப்பாட்டத்தில் மய்கல் வன் லிங்கன் 25, ஸனே கிரீன் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் டிம் ஸொவ்தி மற்றும் டிரன்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

Popular

More like this
Related

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...