ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 40 வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி ஆப்கான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் நஜிபுல்லாஹ் 73 , குல்பதின் 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் போல்ட் 3 , ஸொவ்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
125 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 18.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் 40, டேவோன் கொன்வே 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ரசீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
இப் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்து அணி குழு 2 இல் இரண்டாவது அரையிறுதிக்கு செல்லும் அணியாக தகுதி பெற்றுள்ளது.ஆப்கானின் தோல்வியோடு இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பும் கனவாகியது.