ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 39 வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.இப் போட்டி ஷார்ஜாவில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
தென்னாப்பிரிக்கா அணியின் துடுப்பாட்டத்தில் டஸ்ஸன் 94 , மர்க்ரம் 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் முயின் அலி மற்றும் ஆதில் ரசீத் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
190 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் முயின் அலி 37 , டேவிட் மார்லன் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சில் ரபாடா 3 , தப்ரிஸ் ஷம்ஸி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
தென்னாப்பிரிக்கா அணி போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதி வாய்ப்பை முற்றாக இழந்து தொடரிலிருந்து வெளியேறுகின்றது.இதனடிப்படையில் குழு 1 இல் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.