T20 Highlights: ஐந்து அதிரடி வெற்றியுடன் “சூப்பர் 12” சுற்றை நிறைவு செய்தது பாகிஸ்தான்!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 41 வது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் இன்று (07) மோதின.இன்றைய போட்டி சார்ஜாவில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பாபர் அசாம் 66(47), முஹம்மத் ஹபீஸ் 31(19), கடைசி நேரத்தில் 18 பந்துகளில் 54 ஓட்டங்களை அதிரடியாக அனுபவ வீரர் சுகைப் மலிக் பெற்றுக் கொடுத்தார்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் ஹம்ஸா தாஹிர் மற்றும் ஸப்யான் சரீப் தலா 1 விக்கெட்டுகளையும், கிரிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.190 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

ஸ்கொட்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ரிச்சர்ட் பெரிங்டன் 54(37), ஜோர்ஜ் முன்ஸே 17(31) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான்அணியின் பந்து வீச்சில் சதாப் கான் 2 (14) , சஹீன் அப்ரிடி , ஹரீஸ் ரொவ்ப் , ஹசன் அலி தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.போட்டியின் ஆட்ட நாயகனாக அதிரடியாக ஆடிய சுகைப் மலிக் தெரிவானார்.

இன்றைய வெற்றியுடன் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.அதாவது,

முதலாவது போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

இரண்டாவது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

மூன்றாவது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

நான்காவது போட்டியில் நமீபியாக்கு எதிராக 45 ஓட்டங்களால் வெற்றி.

ஐந்தாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக 72 ஓட்டங்களால் வெற்றி.

பாகிஸ்தான் அணி எதிர்வரும் 11 ஆம் திகதி அரையிறுதியில் அவுஸ்திரேலியா அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...