T20 Highlights: அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 38 வது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின.இன்றைய போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் கெய்ல் 15, லேவிஸ் 29, கெட்மயர் 27, பொல்லார்ட் 44, ரஸல் 18, பிராவோ 10 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஸம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கெஸல்வூட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.157 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 16.2 ஓவர்கள் முடிவில்  2 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்று வெற்றி அடைந்தது.

அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் டேவிட் வோர்னர் 89 , மிச்சல ஸ்டார்க் 53 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் கிரிஸ் கெய்ல் மற்றும் அகேல் ஹொசைன் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...