ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நேற்று டுபாய் மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் முஹம்மத் ரிஸ்வான் 67, பாபர் அசாம் 39ஓட்டங்களையும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி 55 ஓட்டங்களை பக்ஹர் சமான் பெற்றுக் கொடுத்தார்.
அவுஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் கம்மின்ஸ் மற்றும் ஸம்பா தலா 1 விக்கெட்டுகளையும் மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
177 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி மெதிவ் வேர்ட் 17 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.டேவிட் வோர்னர் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சதாப் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாளை மறுதினம் இறுதி ஆட்டத்தில் (14) அவுஸ்திரேலியா அணி நியூசிலாந்தை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.