ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி ஷெய்க் ஸெய்ட் அபுதாபி மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் மொயின் அலி 51(37) , மாலன் 41(30) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸொவ்தி ,மய்ல்ஸ மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
167 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 3 ஓவர்கள் முடிவில் 13 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.போட்டி தொடர்கிறது