ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று(11) மோதுகின்றன.இன்றைய போட்டி டுபாயில் இடம்பெறுகின்றது.
நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தான் அணியில் இரு வீரர்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவித்திருந்த போதும் . அணியில் எந்த மாற்றங்களும் இல்லை என பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.