அபுதாபி மைதானத்தின் பொறுப்பதிகாரி மோகன் சிங் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இன்றைய (07) போட்டி ஆரம்பிக்கப்பட முன்னர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரையில் மரணத்துக்கான காரணம் என்ன என்பது கண்டறியப்படவில்லை.இன்றைய நியூசிலாந்து மற்றும் ஆப்கான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வீரர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.