ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி இன்றைய தினம் டுபாய் மைதானத்தில் இலங்கை இந்திய நேரப்படி இரவு 7,30 க்கு இடம்பெறவுள்ளது.அரையிறுதிக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முஹம்மத் ரிஸ்வான் மற்றும் சுகைப் மலிக் ஆகியோர் காய்ச்சல் காரணமாக பங்குபற்றவில்லை.அதன் பின்னர் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது எதிர்மறையென பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுடனான இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் களமிறங்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.