அட்டாளைச்சேனையில் ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் அணியில் புதிய அங்கத்தவர்கள் இணையும் விசேட கலந்துரையாடல்

Date:

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஐக்கிய இளைஞர் சக்தியில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் புதிய அங்கத்தவர்கள் இணைதலும் எதிர்கால முன்னெடுப்புகள்
பற்றிய கலந்துரையாடலும் இன்று (18) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய இளைஞர் சக்தியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளருமான
முகம்மட் சர்பான் தலைமையில் அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், ஐக்கிய இளைஞர் சக்தியின்
தேசிய செயற்குழு உறுப்பினரும்
அம்பாறை மாவட்ட செயலாளரும் அமைப்பாளருமான
றிஸ்கான் முகம்மட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அதிதியாக அம்பாறை மாவட்ட செயற்குழு முக்கியஸ்தரும், பொத்துவில் பிரதேச அமைப்பாளருமான ஆஷிக் சுபைர் கலந்து சிறப்பித்தார்.

அப் பிரதேச இளைஞர்களின் எதிர்காலச் செயற்றிட்டங்கள்
பற்றி மிகச் சிறப்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது அங்கத்துவப்படிவத்தைக் கையளித்து அங்கத்தவர்களாக இணைந்து கொண்டனர்.

அத்துடன் எதிர்காலத்தில் தாங்கள் ஐக்கிய இளைஞர் சக்தியோடு கைகோர்த்துச் செயற்படத் தயாராக உள்ளதாகவும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களும் இதன்போது உறுதியளித்தனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...