அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல் – 5,275 நோயாளிகள் இதுவரையில்!

Date:

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரையில் நாட்டில் 5,275 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அந்தவகையில்,ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும்,இந்த காலப் பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளிகள் 706 ஆக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் காலி மாவட்டத்தில் 643 நோயாளர்கள், களுத்துறை மாவட்டத்தில் 600 நோயாளர்கள் , கேகாலை மாவட்டத்தில் 418 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 4 எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் 8,579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ் வருடம் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...