இந்தியாவின் மிகவும் வறுமையான மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக நிதி ஆயோக் ( Niti Aayog’s) நடத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், குழந்தைகள் மற்றும் இளம் வயது இறப்பு விகிதம் மக்களின் வாழ்க்கை தரம் உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களை கொண்டு நிதி ஆயோக் ( Niti Aayog’s) நடத்திய கணக்கெடுப்பில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகியவை இந்தியாவின் மிக ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
நிதி ஆயோக் அமைப்பு ( Niti Aayog’s) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பின்வருமாறு,
உத்தரப்பிரதேசம்- 37.79%
மத்திய பிரதேசம்- 36.65%
மெகலாய – 32.67%
கேரளா – 0.71%
கோவா – 3.76%
சிக்கிம்- 3.82%
தமிழ் நாடு- 4.89%
பஞ்சாப்- 5.59%