இலங்கை மனித மூலதன அபிவிருத்திக்காக உலக வங்கியுடன் கை கோர்த்தது!

Date:

நாட்டில் சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பில் மனித மூலதனத்தின் சிறந்த முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் உலக வங்கியுடன் கை கோர்த்துள்ளது.இதன் மூலம் உலக வங்கியின் மனித மூலதன செயற்திட்டத்தில் இணையும் 82 வது நாடாக இலங்கை அமைகிறது.

இன்று (03) நடைபெற்ற உயர்மட்ட மனித மூலதன மாநாட்டிலே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ , பின்வருமாறு குறிப்பிட்டார்,

மக்களில் முதலீடு செய்வது என்பது எமது அரசாங்கத்தின் மூலோபாயத்தில் பிரதானமானதாக இருக்கின்றது. கொவிட்-19 பின்னரான மீட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கு முக்கியமானதாகும்.

ஆரம்ப சிறுபராய கல்வியை மேம்படுத்துவதற்கு, உலகளாவிய முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வியை எட்டுவதற்கு உயர்கல்வி மற்றும் தொழிநுட்ப தொழிற்கல்விக்கான அணுகும் வசதியையும், தரத்தையும் அதிகரிப்பதற்கும், எதிர்கால சுகாதார பராமரிப்பு சவால்களை எதிர்கொள்வதற்கும், சுகாதார பராமரிப்பு முறைமையின் தரத்தை பரவலாக்குவதற்கும், மற்றும் சமுர்த்தி மற்றும் ஏனைய பாதுகாப்பு வேலைகளின் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகள் ஊடாக இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய தனிநபர்கள் மற்றும் குடும்பங்களிற்கு ஆதரவளிப்பதற்கும் மனித மூலதனத்தில் முதலீடு செய்வதற்கு நாம் தொடர்ந்தும் முன்னுரிமையளிப்போம் என கெளரவ நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...