மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் (11) மூடப்பட்ட கொழும்பு- கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதி மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ் .வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு- கண்டி வீதியில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.