இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுள்ளது.அதன்படி, தனது முதல் இன்னிங்க்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 1 விக்கெட்டு இழப்பிற்கு 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதனையடுத்து, இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி சற்று முன்னர் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய பெத்தும் நிச்சங்க 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் வீரச்சாமி பெருமாள் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.