வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இது தொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று (03) வழங்கியுள்ளார்.
நாளை (04) வியாழக்கிழமை இந்துக்களின் தீபாவளி பண்டிகை இடம்பெறுவதால் பொது விடுமுறை நாளாகும். அதனால் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதனால் பதில் நாளாக வரும் நவம்பர் 13ஆம் சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என்று மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.