மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில் 6670mph மைல் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையைத் தயாரிக்கத் ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
தலைநகர் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள ரியூடோவோ என்ற இடத்தில் ரகசிய ஆலையில் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸிர்கான் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணையை அடுத்த ஆண்டில் தயாராக வைத்திருக்க ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளதாகக் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு முன் இந்த ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.