இன்றைய வானிலை அறிக்கை!

Date:

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில்  பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்

Popular

More like this
Related

தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு...

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக...

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...