இன்றைய வானிலை அறிக்கை!

Date:

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில்  பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்

Popular

More like this
Related

லிட்ரோ கேஸ் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு!

இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ (Litro)...

சவூதி நிதியுதவியுடன் இரத்தினபுரியில் உருவானது பிரம்மாண்ட மருத்துவ பீடம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று திறந்து வைக்கிறார்!

இலங்கையின் மருத்துவக் கல்வித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சவூதி அரேபியாவின்...

பேராயர் டொன் விமலசிறி ஜயசூரியவின் வருகையை முன்னிட்டு விசுத்தாராம விகாரையில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்!

சிலாபம் மறைமாவட்டப் பேராயராகப் புதிதாகக் கடமையேற்றுள்ள கௌரவத்திற்குரிய டொன் விமலசிறி ஜயசூரிய...