இலங்கை நபரின் கொலை சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் – இம்ரான் கான்!

Date:

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கை நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கூடிய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சியால்கோட் நகரில் நேற்று (03) இலங்கையர் ஒருவர் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு , எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது இந்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதுடன் , அதனுடன் தொடர்புடைய சகலருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என தாம் உறுதியளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குறித்த விசாரணைகளில் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதாகவும், விசாரணைகளில் எந்த தவறும் இடம்பெறாது எனவும் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் நாட்டின் அரசாங்கம் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.சியல்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணியாற்றிய இலங்கையர், அந்த தொழிற்சாலையின் தொழிலாளர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு ,அவரது உடல் எரியூட்டப்பட்டது.இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் ‌வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக உறுதிப்பாடுகளை பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் ஊடாக மேற்கொள்ள முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.இது தொடர்பில் பாகிஸ்தான் அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என்று குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...