ஒமிக்ரோன் பரவல் காரணமாக அபிவிருத்தியடைந்த நாடுகள் கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் பரவல் காரணமாக சில செல்வந்த நாடுகள் செயலூக்கி தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது.பெருமளவில் மக்களுக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்தாதுள்ள நாடுகளுக்கான விநியோகத்தில் இது தாக்கம் செலுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
ஒமிக்ரோனிலிருந்து பாதுகாப்பு பெற மேலதிக தடுப்பூசிகள் தேவையா என்பது இதுவரையில் தெளிவாக தெரியவில்லை.எனவே அபிவிருத்தி அடைந்த நாடுகள் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.