பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அம்பாறையில் நடாத்தப்பட்ட மாவட்ட நிகழ்வு!

Date:

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் SGBV திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாவட்ட நிகழ்வு நேற்று முன்தினம் [30] அம்பாறை மொன்டி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இம்முறை ‘Orange the World – பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிக்கவும்’ எனும் தொனிப்பொருளில்,

கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரனாகே கலந்து சிறப்பித்தார்.

மேலும் அதிதிகள் வரிசையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெகதீசன், வைத்தியர் சமீர, மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் திருமதி கமகே, மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுரேகா எதிரிசிங்க, ஆசிய நிலையத்தின் பிரதிநிதி ஜவாஹிர், அம்பாறை பிரிவு ஒன்றின் பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத், அம்பாறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர் . இந் நிகழ்வில் மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான முன்மொழிவுகளை திணைக்களங்களின் பிரதிநிதிகள் முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வை சிறப்பிக்க அம்பாறை மாவட்டத்தில் பணியாற்றும் சகல பொலிஸ் நிலையங்களினதும் சிறுவர், மகளிர் பிரிவு பொறுப்பதிகாரிகள், சகல பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கப்சோ நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.பி.எம்.றின்ஸான்)

 

Popular

More like this
Related

வரலாற்றில் முதன்முறையாக வதிவிட விசாவை வழங்கிய இலங்கை!

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட...

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...