வியட்நாமில் வெள்ளம் – 18 பேர் மாயம்!

Date:

வியட்நாமில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதில் சிக்கி 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வியட்நாமின் மத்திய பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருவதுடன் ,வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.சுமார் 780 ஹெக்டேர் அளவிலான பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ள பாதிப்பில் சிக்கிய மக்களை மீட்டெடுக்கும் பணிகளில் மீட்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந் நிலையில் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் உயிரிழந்ததாகவும் ஊகிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிகழ்ந்த மண்சரிவில் சிக்கி 378 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...