ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி , கடந்த 4 ஆம் திகதிக்கு முன்னர் வீடுகள் மற்றும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில் நுகர்வோர் அதிர்ப்தியளித்துள்ளனர்.இதனால் இத் தீர்மானத்தை லிட்ரோ நிறுவனம் எடுத்துள்ளது.மேற்படி திகதிக்கு முன்னதாக விநியோகிக்கப்பட்ட முத்திரை அகற்றப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்கள் இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.