அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்; மூவருக்கு காயம்!

Date:

பயணிகள் இலகு ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் விமானத்தை தரையிறக்க விமானி நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான சேவை நடவடிக்கை பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் பெண் ஒருவர் அடங்களாக மூவர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை விமானப்படையின் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலகுரக விமானம் ஒன்று பயாகல கடற்கரையில் அவசரமாக தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மோசடிப்...

அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழை தொடரும்

குறைந்த காற்றழுத்தப் பகுதி அடுத்த 48 மணித்தியாலத்தில் தீவிலிருந்து விலகிச் சென்று...

உயிர் காக்க உதவுவோம்: 9 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவசர உதவி கோரிக்கை

ஹெம்மாதகமவைச் சேர்ந்த  ஹஸ்மியான் மற்றும் டாக்டர் ரஷீதா தம்பதிகளின் 9 வயது...

நாட்டில் யானைக்கால் நோயாளிகள் அடையாளம்!

கடந்த ஆண்டில் நாட்டில் 68 யானைக்கால் நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக யானைக்கால்...