ஜனவரி 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டண அறவீட்டுக்கான மீட்டர் கட்டாயமாக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில்,இதற்கான விதி முறை அமுலாக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்குள், அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர வண்டிகளுக்கும் கட்டணங்களை அறவிடுவதற்கான மீட்டரை பொருத்துதல் கட்டாயமாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)