கொழும்பு உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் சிலவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட மின் விநியோக தடை காரணமாக போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் இயங்காமையே குறித்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் மூன்று மணித்தியாலங்களில் மின்சாரத்தை வழங்க முடியுமென இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.