அரசு இறக்குமதி வரியை நீக்கியுள்ளமையினால் முட்டையின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் முட்டை உற்பத்தி செலவு குறைந்துள்ளதுடன் இந்த நாட்களில் ஒரு முட்டையின் விலை 23.50 சதத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது.இதேவேளை கோழி இறைச்சியின் விலையை சுமார் 50 ரூபாவினால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தற்போது ஒரு முட்டை 26-30 ரூபாவுக்கும், ஒரு கிலோ கோழி இறைச்சி 800 ரூபாவிலிருந்து 900 ரூபாவுக்கும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.