சமூகவலைத்தள பயனர்களிடம் பிரியந்தவின் சகோதரர் முன்வைத்துள்ள உருக்கமான கோரிக்கை!

Date:

பாகிஸ்தானில் இலங்கை நபரான பிரியந்த படுகொலை செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.இந் நிலையில், உயிரிழந்த பிரியந்த குமாரவின் சகோதரர் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, தனது சகோதரர் கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளிகளை பகிர்வதை நிறுத்துமாறு ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தள பாவனையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தனது சகோதரரின் கொலை தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது தனது குடும்பத்திற்கும், குறிப்பாக பிரியந்தவின் மனைவிக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, ஏற்கனவே பகிரப்பட்டு வரும் காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூகவலைத்தளங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...