சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் செங்கலடி (A005) வீதியின் பிபிலவிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்பு

Date:

இன்று (28) சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7,200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதியின் பிபிலவிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் பேராதனை – பதுளை – செங்கலடி (A005) வீதி 275 கிலோமீற்றர் நீளமானது. பிபில முதல் செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் நீளமான வீதிஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இன்று (28) விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படுகிறது .

பிபிலவிலிருந்து செங்கலடி வரையிலான அபிவிருத்தி செய்யப்பட்ட வீதியின் நீளம் 86.7 கி.மீ. இந்த வீதி அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த வீதியை இரண்டு உள்ளூர் நிர்மாணத்துறை நிறுவனங்கள் மூன்று கட்டங்களாக நிர்மாணித்துள்ளனர். முதற்கட்டமாக பிபில முதல் பதியத்தலாவை வரையிலான 29 கிலோமீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. . இரண்டாம் கட்டமாக பதியத்தலாவ தொடக்கம் தம்பிட்டி வரை 30 கிலோ மீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. . மூன்றாம் கட்டமாக தம்பிட்டிய முதல் செங்கலடி வரையிலான 27.7 கிலோமீற்றர் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. பிபிலை முதல் செங்கலடி வரையிலான வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கு 7,200 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீதி நிர்மாணத்தின் போது நிலங்களையும் சொத்துக்களையும் இழந்த பிபில, ரிதீமாலியத்த, பதியத்தலாவ மற்றும் மஹாஓயா ஆகிய பிரதேச செயலக பிரிவு மக்களுக்கு 12.4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

காணொளி 
https://fb.watch/aayWEMV3QC/

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...