சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிக்கும் நிகழ்வு. 

Date:

சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்‌.ஏ.மஜீதின் ஓய்வு நிலையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு  மற்றும் வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். பைசாலை கௌரவிக்கும் நிகழ்வும் மிகச் சிறப்பான முறையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் யு.எல். நஸார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். சாகிர் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய கணக்காளர் ஹபிபுல்லா, விசேட அதிதியாக முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீதின் புதல்வர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஸ்லம் சஜா மற்றும் வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பிரதி அதிபர் றிப்கா அன்ஸார், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள்,  ஆசிரியைகள் உட்பட மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...