பாகிஸ்தானில் நேற்று (03) இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந் நாட்டு அரசு மேற்கொள்ளும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் , மக்களும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் , பின்வருமாறு தெரிவித்துள்ளது,
இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு எடுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.இதேவேளை , பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.