பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நிறைவு!

Date:

பாகிஸ்தானின் சியல்கோட்டில் தீவிரவாதக் குழுவினால் தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த வெள்ளிக்கிழமை (03) உயிரிழந்த பிரியந்த குமார தியவதன தனது மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் பிரியாவிடை பெற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார தீவிரவாதக் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.பிரியந்தவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் நண்பர்கள் அவரது இல்லத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.அவரது திடீர் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமய வழிபாடுகளுக்குப் பிறகு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து பிரியந்தவின் சடலம் அவரது நண்பர்களால் கணேமுல்ல பொல்ஹேன மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...