பாகிஸ்தான் சியால்கோட் நகரில் பிரியந்த குமார என்ற இலங்கை நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்று முன்தினம் (06) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதுடன் , அவரது பூதவுடல் கனேமுல்ல- பொக்குண சந்தி- கந்தலியத்த பாலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (08) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது.