மியான்மர் தலைவர் ஆங்சான் சூகிக்கு நான்கு ஆண்டு சிறை!

Date:

மியான்மர் அரசின் ஆலோசகராக இருந்த ஆங்சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் மியான்மர் ராணுவம் அந் நாட்டு அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை அடுத்து ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்டோரை ராணுவம் கைது செய்தது. அப்போது முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந் நிலையில், ராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதாகவும், கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும் ஆங் சான் சூகிக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...