மெக்சிக்கோவில் இடம்பெற்ற விபத்தில் 53 அகதிகள் உயிரிழப்பு; 58 பேர் படுகாயம்!

Date:

மெக்சிக்கோவில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லொரி கவிழ்ந்து விழுந்ததில் 53 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு 58 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கவுதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்கா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அகதிகள் உட்பட பலரை ஏற்றிக் கொண்டு மெக்சிக்கோவின் சய்பாஸ் மாகாணம் வழியாக அமெரிக்கா எல்லைக்குச் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் ஆபத்தான வளைவை கடக்க முயற்சித்த போதே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலேயே 53 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு , 58 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகளவான பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2021/12/10/xxx-3&ved=2ahUKEwj1u6T-g9n0AhWyzDgGHaDOAUo4ChAWegQIGhAB&usg=AOvVaw2PrN5-W-5QJXQlhYPjIWtt

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...