ஜேர்மனியின் பிரதமராக 16 ஆண்டுகளாகப் பதவி வகித்த ஏஞ்சலா மெர்கல் இன்று (08) ஓய்வு பெறுகிறார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின் செல்வாக்கில் ஜேர்மனியை பன்மடங்காக உயர்த்திய பெருமைக்குரியவராவார்.தனது ஆட்சிக் காலத்தில் நான்கு அமெரிக்கா ஜனாதிபதிகள், நான்கு பிரான்ஸ் ஜனாதிபதிகள், ஐந்து இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும் எட்டு இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.தனது பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து மெர்கலின் அரசியல் வாரிசு ஓலஃப் சோல்ஸ் இன்று (08) பதவியேற்பார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.