17 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவு கூர்ந்து கெளரவ பிரதமர் விளக்கேற்றினார்!

Date:

பதினேழு ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமி பேரனர்த்தத்தில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (26) முற்பகல் அலரி மாளிகையில் விளக்கேற்றினார்.

பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் கெளரவ பிரதமருடன் இணைந்து விளக்கேற்றி சுனாமியில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்.

முற்பகல் 9.25 மணிமுதல் 9.27 வரை மெளன அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து விளக்கேற்றி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.சுனாமி அனர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேசிய பாதுகாப்பு தினம்* இன்றைய தினத்தில் அனுஷ்டக்கப்படுகிறது.

பதினான்கு மாவட்டங்களை பாதித்து சுனாமி அனர்த்தத்தில் 31,229 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4100 பேர் காணாமல் போயினர். இவ்வனர்த்தத்தில் 516,150 பேர் இடம்பெயர்ந்ததுடன், சுமார் 250,000 பேரது வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிந்தன.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ பிரதமர், பிரதமரின் பாரியார் மற்றும் இராணுவத்தினர். பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...