2022 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக 157 வாக்குகளும் , எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பமானது.கடந்த நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமான வரவு செலவு திட்டம் இன்றுடன் மூன்றாம் வாசிப்புடன் நிறைவடைந்துள்ளது.