Breaking News: இந்திய ராணுவ தலைமை அதிகாரி சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது!

Date:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்ற போது ஒரு ஹெலிகொப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியுள்ளது.குறித்த ஹெலிகொப்டரில் முப்படைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்புக்கள் தொடர்பில் எதுவும் உறுதியாக பதிவாகவில்லை.

ஹெலிகொப்டர் வீழ்ந்த இடத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.4 சடலங்கள் இதுவரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ,3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரில் 14 பேர் பயணம் செய்ததாகவும் அதில் 4 இராணுவ உயர் அதிகாரிகள் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...